நத்தத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் விழா: எம்.பி. தொடங்கி வைப்பு.

நத்தத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவை எம்.பி. தொடங்கி வைத்தார்;

Update: 2024-01-24 11:11 GMT

நத்தத்தில், தாலிக்கு தங்கம் வழங்கு விழாவை தொடங்கி வைத்தார் எம் .பி.

நத்தத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி கலந்து கொண்டு வழங்கினார். 85 பேர் பயன் பெற்றனர்.

நத்தம், ஜன. 23:

நத்தத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய ஆணையாளர் விஜய சந்திரிகா தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ. ஆண்டி அம்பலம், பேரூராட்சி சேர்மன் சேச்சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார் பழனிச்சாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நகர அவைத் தலைவர் சரவணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் இஸ்மாயில், வசந்த சுஜாதா, மாரிமுத்து பழனிகுமார், மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் கணேசன் ராஜாராம் வெங்காய கடை சேகர் உள்ளிட்ட திமுக மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கம் வீதம் 85 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா அனைவரையும் முன்னதாக வரவேற்றார்.

Tags:    

Similar News