அ.தி.மு.க. 52ம் ஆண்டு துவக்க விழாவில் நத்தம் விசுவநாதன் பங்கேற்பு
அ.தி.மு.க. 52ம் ஆண்டு துவக்க விழாவில் நத்தம் விசுவநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கைலாசநாதருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம், சர்க்கரை, விபூதி, குங்குமம், தயிர் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அரளி, மல்லிகை, செவ்வந்தி, முல்லைப்பூ, தாமரைப்பூ உள்ளிட்ட பல வண்ண மலர்களுடன் காய்கறிகள், பழங்கள் முதலியனவைகளுடன்சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். முன்னதாக, செண்பகவள்ளி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இதில், நத்தம், மீனாட்சிபுரம், கோவில்பட்டி, வேலம்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே சாணார்பட்டி, கணவாய்பட்டி, ஒத்தக்கடை, அஞ்சு குழிப்பட்டி, விராலிப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. கட்சியின் 52-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு,.கழக துணை பொதுச் செயலாளரும் நத்தம் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமை தாங்கி அதிமுகவின் கொடியேற்றி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் நத்தம் ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் இராமராசு,சுப்பிரமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி,மாநில பொதுக்குழு உறுப்பினர், மேட்டுக்கடை செல்வராஜ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.