பூச்செடிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை யோசனை
நிலக்கோட்டையில் மல்லிகை பூ சாகுபடியில் பூச்சி தாக்குதலை தடுக்க தோட்டக்கலை மற்றும் விவசாய வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக, மல்லிகை பூச்செடிகளில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால், வட்டார அலுவலர்கள் வயலில் ஆய்வு மேற்கொண்டு மல்லிகை பூ சாகுபடிக்கு அறிவுரைகளை வழங்கினர். இருப்பினும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் 15.07.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமிய அறிவியல் ஆராய்ச்சி வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இருப்பினும், பூச்சி தாக்கத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை வல்லுனர் குழு டாக்டர் முத்தையா பூச்சியில் வல்லுநர் தலைமையில் ராஜதுரை, கல்பனா (தோட்டக்கலை வல்லுநர்கள்) கொண்ட குழு வயல் ஆய்வு செய்து, பூ, பூ மொட்டு புழு ஆகியவைகளின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.