போட்டி தேர்வுகளை இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டும் : அமைச்சர்..!
இளைஞர்கள் அரசின் போட்டித் தேர்வுகளை சவாலாக எதிர்கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.;
போட்டித் தேர்வுகளில், இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என அமைச்சகர் பேச்சு. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேர்வர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இளைஞர்கள் அரசுப்பணியில் சேர்ந்து பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை ஆற்றிட வேண்டும் என தெரிவித்தார்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(தொகுதி-2 மற்றும் 2ஏ) தேர்வினை எழுத உள்ள தேர்வர்களை இன்று(06.09.2024) சந்தித்து, தேர்வுக்கூட அனுமதி சீட்டினை வழங்கி, தேர்வினை சிறந்த முறையில் எதிர் கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிட வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
போட்டித் தேர்வுகள் மூலமாக அரசு வேலை பெறுவது எளிது. திறமையாக படித்து மத்திய மற்றும் மாநில அரசுப்பணிகளில் சேர்ந்து பயன்பெற முடியும். அதற்கு லட்சியம் அவசியம். அந்த லட்சியத்தை நோக்கி பயணிக்க முயற்சி எடுப்பது முக்கியம்.