தந்தை கண்டித்ததால் பொம்மிடி அருகே விஷம் குடித்து வாலிபர் சாவு

பொம்மிடி அருகே, தந்தை கண்டித்ததால விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-10-23 14:00 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த மணலூரை சேர்ந்தவர் மாது.  இவரது மகன் குமார்,வயது 25.விவசாயி. கடந்த 12 ந்தேதி , தந்தை மாது ஆடு ஏன் மேய்க்க வில்லை என குமாரை கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த குமார்,  வீட்டில் வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார்.

இதில், உயிருக்கு போராடிய அவரை, உடனடியாக உறவினர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்,  சிகிச்சைபலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து,  மாது பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News