கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி இரவு 11 மணியளவில் குழந்தைராஜின் உடலை மீட்டனர்.;

Update: 2022-02-08 06:45 GMT

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குழந்தைராஜ் 24. கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை 6 மணியளவில் அக்கிராமத்தில் உள்ள முருகேசன் என்பவரின் விவசாய கிணற்றில் மோட்டார் பழுது பார்க்க கிணற்றில் இறங்கும் போது தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கும், கடத்தூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி இரவு 11 மணியளவில் குழந்தைராஜின் உடலை மீட்டனர். இவருக்கு புவனேஸ்வரி 20  என்ற மனைவி உள்ளார்.புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News