பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புங்கம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குழந்தை உடையார் இவரது மகன் பாரதி,வயது 45. இவர் டிராக்டர்,ஜே.சி.பி.வைத்து வாடகை விடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரவணபவன், லோகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இன்று மதியம் தனது வீட்டிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றார். சற்றுத் தொலைவே சென்ற அவர், பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை கல் மீது பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அ.பள்ளிபட்டி காவல் நிலையத்தில் மனைவி சசிகலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.