கடத்தூர் அருகே தலையில் அடிபட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

கடத்தூர் அருகே குடிபோதையில் தலையில் அடிபட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-10-04 05:15 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்,வயது 42. கட்டிடமேஸ்திரியான இவர் கடந்த 28ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டில் நுழையும் போது தடுமாறி கீழே விழுந்தார். தலையைில் அடிபட்ட இவரை மறுநாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று காலையில் மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சகாதேவனுக்கு அஜிதா என்ற மனைவியும், கீர்த்தனா,வயது.16., சுவிதா,வயது14., என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Tags:    

Similar News