பொம்மிடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

பொம்மிடி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-04 05:15 GMT

பைல் படம் 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த வேப்பமரத்தூரை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மஞ்சுளா வயது 35. இந்நிலையில்  கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா, நேற்று பூச்சி கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடினார். இதனையடுத்து மஞ்சுளாவை மீட்ட உறவினர்கள் முத்தம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்தார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஹரிணி, ஹரீஸ், ரித்தீஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News