பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவி கடத்தல், கணவன் போலீசில் புகார்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவி கடத்தப்பட்டதாக கணவன் போலீசில் புகார் செய்தார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கோப்பை காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சம்பத், வயது 48.இவரது மனைவி விஜயா வயது 40.இவர்களுக்கு கெளசல்யா வயது 17.என்ற மகளும் , கெளதம் வயது 15 என்ற மகனும் உள்ளனர்.
இன்று காலை குண்டல்மடுவு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கனகராஜ் ஆகிய இருவரும் காரில் வந்து தனது மனைவி விஜயா, மகள் கெளசல்யா, மகன் கெளதம் ஆகிய மூவரையும் கடத்தி சென்றுவிட்டனர், என சம்பத் கொடுத்த புகாரின் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.