பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம்
பாப்பிரெட்டிப்பட்டிஅரசு கல்லூரியில் வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த மாணவ மாணவியர்கள் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பதிவு செய்யும் பொருட்டு வாக்காளர் சிறப்பு சேர்க்கை முகாம் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஜனவரி 1 2022 அன்றோ அல்லது அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்து, இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை இருப்பின் அவர்கள் இத்திட்டத்தின் மூலமாக அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்கள் பெயரினை புதிதாக பதிவு செய்து கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த முகாமில், புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பிய 65 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரியில் தேர்தல் பிரிவு அலுவலரிடம் வழங்கினார்கள்.
இந்த முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி, தேர்தல் தனி வட்டாட்சியர்சிவஞானம், கல்லூரி தேர்தல் பிரிவு அலுவலர் அருண் நேரு மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.