முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்;
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அமமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றிம் சிந்தல்பாடி,தொங்கனூர்,சி.அய்யம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்துஅமமுக'வைச் சேர்ந்த 50'க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் .ஆ. கோவிந்தசாமி,,கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல்,தருமபுரி அதிமுக நகர கழக செயலாளர் பூக்கடை ரவி,கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம்,மாநில கூட்டுறவு பணியாளர்கள் சங்க தலைவர் சின்.அருள்சாமி, தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ம.கோவிந்தசாமி, இலளிகம் கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.