தர்மபுரி அருகே தந்தையை தாக்கி கொலை செய்த மகன் கைது

தர்மபுரி மாவட்டத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-02 05:38 GMT

தர்மபுரி மாவட்டம் மதி கோன்பாளையம் எம். ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). விவசாயி இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வசித்து வருகின்றனர். வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்த மகன் பிரகாஷ் (35) பற்றி  தந்தை பெருமாள் கேட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த பெருமாளை சிகிச்சைக்கு செல்ல விடாமல் பிரகாஷ் தடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் அவசர அவசரமாக பெருமாள் சடலத்தை அடக்கசெய்ய முயன்றுள்ளார். தகவலறிந்த வி.ஏ.ஓ. மதிகோன்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், பிரகாஷ் தாக்கியதில் பெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதிகோன்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News