பொம்மிடியில் தேங்கும் கழிவுநீர்: தொற்று நோய் பரவும் அபாயம்

பொம்மிடியில் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் அமைக்க படாததால் பொம்மிடி-பாப்பிரெட்டிபட்டி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது

Update: 2021-10-21 04:45 GMT

பொம்மிடியில் ரோட்டில் குளம் போல் தேங்கும் சாக்கடை கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொம்மிடி ஊராட்சியில் பொம்மிடி, சந்தையூர், வடசந்தையூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பொம்மிடியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பயன்படுத்தும் கழிவுநீர், செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. இக்கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முறையான கால்வாய் அமைக்கப்படாததால் பொம்மிடி-பாப்பிரெட்டிபட்டி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் வழுக்கி கழிவுநீரில் கீழே விழும் நிலை உள்ளது.

இது மட்டுமல்லாமல் கழிவுநீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News