கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிப்பு பயிற்சி
கிரீன் பார்க் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.;
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளி, தர்மபுரி மாவட்ட காவல் துறையும் இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊக்குவிப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வளர்க்கும் பயிற்சி நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளில் சங்க மாநிலச் செயலாளர் கே .ஆர். நந்தகுமார் தலைமையில் கடத்தூர் கிரீன்பார்க் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் பூவிழி முனிரத்தினம்,அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா,தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி நிறுவனர் சி சுப்பிரமணியன், வன்னியர் சங்க மாநில நிர்வாகி அரசாங்கம், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு, ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி செயலாளர் காயத்ரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் சரவணன், பொம்மி டி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் இரா.முனிரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர், வின் யுவர் வீக்னெஸ் மோடிவேஸ்னல் அகாடமி நிறுவனர் டாக்டர் ஐ.ஜெகன் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். பள்ளி நிர்வாக அலுவலர் ராஜா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்