பாப்பிரெட்டிப்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் முத்து, டேங்க் ஆப்ரேட்டர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் குமார், செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.