பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செய்திகளும் வருவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன நிலையில் பாப்பிரெட்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-23 15:45 GMT

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உதவித்தொகையை பெற ஏராளமான குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்த அரசு அதில் 1.6 கோடி நபர்களுக்கு தற்போது தொகையை ஒவ்வொரு கட்டமாக வழங்கி வருகிறது.

தொகைக்கு விண்ணப்பித்த பெரும்பா லான குடும்பத் தலைவிகளுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் கிடைக்கப்பெறவில்லை எனவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து தொலைபேசிக்கு எந்த விதமான குறுஞ்செ ய்திகளும் வருவதில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. மேலும் தகுதியுடைய நபர்கள் விடுபட்டிருந்தால், இ-சேவை மூலமாக வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையை அறிந்து மேல் முறையீடு செய்து பயன் பெறலாம். என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பத்தின் நிலையை அறியவும் , விண்ணப்ப த்திற்கு மேல்முறையீடு செய்யவும், தகுதி இருக்கும் தங்களுக்கு பணமும் வரவில்லை , அதற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை என கூறி இன்று பாப்பிரெட்டிப் பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், காலை முதலே குடும்பத் தலைவிகளின் கூட்டம் அலைமோதியது.

இதனை அறிந்த அரூர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொது மக்களிடத்தில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறினார். மேலும் தகுதியான விண்ணப்பங்களை கவனத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய விண்ணப்பங்களை தகுதியான ஆவணங்களுடன் இணைத்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த திடீர் ஆய்வு காரணமாக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News