இரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்திய ரயில்வே போலீசார்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்வே நிலையத்தில் அவ்வழியாக நின்று செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், மற்றும் அங்கிருந்த ரயில்வே பயணிகளுக்கு சேலம் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி தலைமையில் போலீசார் பேண்டு வாத்திய இசை வாசித்து கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அப்போது பயணிகளுக்கு ஜூஸ், மாஸ்க்,சானிடைசர் வழங்கியும்,கைகழுவுவுது , சமூக இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தும், இரயிலில் பெண்கள் நகைகள் அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது ஆபத்தான பயணம், ஓடும் ரயிலில் ஏறுவதும், இறங்குவதும் ஆபத்தானது என்றும் முறையற்ற முறையில் தண்டவாளப் பாதை கடப்பது குறித்தும், செல்போனை சார்ஜில் போட்டு உறங்குவது பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பயணிகள் அவசர உதவிக்கு 1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.