20 ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி செயலரை பணியிடமாற்றம் செய்ய பொதுமக்கள் மனு
20 ஆண்டுகளாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் செயலரை பணியிடமாற்றம் செய்ய பொதுமக்கள் மனு அளித்தனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில்19 ஊராட்சிகள் உள்ளன. இதில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலராக கோவிந்தராஜ் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.
இதனால் பஞ்சாயத்து நிதியில் செய்யபடும் பணிகள், செலவினம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளதாகவும், அதிகளவில் பஞ்சாயத்து நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அவரை வெங்கட சமுத்திரத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி , திமுக நிர்வாகிகள் தங்கதுரை, மற்றும் ஊர் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேலிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் கூறும்போது, பொதுமக்கள் உள்ளிட்டோர் ஊராட்சி செயலர் கோவிந்தராஜ் ,20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரிவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.