ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தேங்கும் மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தேங்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-11-30 17:00 GMT

கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் தேங்கும் மழை நீரில் மக்கள் நடந்து செல்லும் அவலம்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் பருவமழை தொடர்ந்து பெய்வதால் தாழ்வாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து விடுகிறது.

இதனை சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தொடர்ந்து நடைபெறுகிறது. மழைநீர் செல்ல கால்வாய்களை தூர்வார வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒடசல்பட்டி கூட்ரோடு 3-வார்டு முஸ்லீம் தெரு பகுதியில் மழைக்காலங்களில் தெரு மற்றும் வீட்டுப் பகுதியில் மழைதண்ணீர் செல்வதால் குழந்தைகள் பெரியவர்கள் வீட்டிற்கு சென்று வர கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் வீட்டின்மண் சுவர் நனைந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது மழைநீர் செல்ல ஏதுவாக நிர்வாகம் தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News