வீரகவுண்டனூர் துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகோரி மக்கள் கோரிக்கை
கடத்தூர் அருகே வீரகவுண்டனூர் துவக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வீரகவுண்டனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அப்பகுதியை சேர்ந்தசுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி இல்லாத நிலையில் ரோட்டோரத்திலும் பள்ளி கட்டிடம் அருகிலும் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்கும் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் மழைநீர் கசிந்து பள்ளி அறைகள் முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது.
எனவே மாணவர்களின் நலலை கருத்தில் கொண்டு அரசு சார்பில் இப்பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.