பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி 3 பேரூராட்சிகளில் 45 வாக்கு சாவடிகள் அமைப்பு: 2 பதற்றமானவை

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியில் உள்ள மூன்று பேரூராட்சிகளில் 45 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-02-02 08:30 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் ஒவ்வொன்றிலும் 15 வார்டுகள் உள்ளன. தலா 15 வாக்கு சாவடிகள் என மூன்று பேரூராட்சிகளில் 45 வாக்கு சாவடிகள் அமைக்கபட்டுள்ளது.

இதில் இரண்டு பதற்றமானவையாகும். மூன்று பேரூராட்சி தலைவர் பதவிகளும் எஸ்.சி., (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடத்தூர் பேரூராட்சியில் 3 வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும், 3வார்டுகள் எஸ்.சி.,பொது பிரிவுக்கும், 5வார்டுகள் (பொது ) பெண்களுக்கும், 4 வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 3 வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும், 2 வார்டுகள் எஸ்.சி.,பொது பிரிவுக்கும், 5வார்டுகள் (பொது ) பெண்களுக்கும், 5 வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் ஒரு வார்டு எஸ்.டி., பெண்களுக்கும், ஒரு வார்டு எஸ்.டி.,பொது பிரிவுக்கும், 3வார்டுகள் எஸ்.சி., பெண்களுக்கும், 3 வார்டுகள் எஸ்.சி., பொது பிரிவினருக்கும், 4 வார்டுகள் பெண்கள் பொதுபிரிவினருக்கும், 3 வார்டுகள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடத்தூரில் -9385, வாக்காளர்களும் பாப்பிரெட்டிப்பட்டி-8456, வாக்காளர்களும்,பொ.மல்லாபரம்-11,134 வாக்காளர்களும் உள்ளனர்.

Tags:    

Similar News