பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
பொம்மிடி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ 4 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது. இதனை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி அதிமுக., உறுப்பினர் கோவிந்தசாமி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பி.டி.ஏ., தலைவர் இடும்பன், அதிமுக., நிர்வாகிகள் சேகர், ராஜா, டோமினிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.