பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பலகோடி வரி ஏய்ப்பு: நோட்டீஸ் விநியோகத்தால் பரபரப்பு

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் எனும் பெயரில் நோட்டீஸ் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-03-11 02:59 GMT

விநியோகம் செய்யப்பட்ட நோட்டீஸ்.

தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள,15 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், முறையாக பேரூராட்சி மூலமாக வரிவசூல் செய்யப்படுவதில்லை. பேரூராட்சி நிர்வாகம் கடந்த, 10 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு, பேரூராட்சிக்கு வரவேண்டிய வரித் தொகையை மறைமுகமாக அரசு அதிகாரிகள் தங்களுக்குள் பறிமாறிக் கொண்டனர்.

இதனால் மாவட்டத்தில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி படுபாதாளத்தில் இயங்கிவருகிறது. சம்பளம் கொடுக்க வழி இல்லாமல் இயங்கி வருகிறது‌. தனியார் தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள் கடந்த, 10 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது, செயல் அலுவலர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை தங்கள் வசம் வைத்து உள்ளனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தொழில் அதிபர்களும், தொழிற்சாலை முதலாளிகளும், கூட்டு சேர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு தேவையான நபர்களை, வெற்றி பெற வைத்துள்ளனர்.என விடுதலை சிறுத்தைகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது, விடுதலை சிறுத்தைகள் தலைவராக வந்தால் தங்களுடைய வரிகளை முழுமையாக செலுத்தச் சொல்வார்கள் என நினைத்து, அவர்களை வரவிடாமல் தடுப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறிவருகின்றனர். இதனையடுத்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் எனும் பெயரில் பொம்மிடி, பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள கிராமங்களில் வரி ஏய்ப்பு நடத்துகின்ற பேரூராட்சி நிர்வாகம் என்ற பெயரில் நோட்டீஸ் வினியோகம் செய்துள்ளனர். இது பொ.மல்லாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌.

Tags:    

Similar News