மோடியின் 71 வது பிறந்த நாள்: அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
மோடியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமியனஹள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் ராமியணஹள்ளியில் விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் சிற்றரசு தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்சியில், குமாரவேல், ராமலிங்கம், வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராமியனஹள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 71 மரக் கன்றுகளை நட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.
நிகழ்சியில் கல்பனா, பிரபு, செல்வம், சிவலிங்கம், தங்கராசு, பச்சையப்பன், அன்பரசு, ஐயப்பன், மகேஷ், சித்ரா, ஆதி, அய்யாவு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.