பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஒருவர் கைது: 2 பேர் தலைமறைவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் தகராறு ஒருவர் கைது :2 பேர் தலைமறைவு;
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தண்ணீர் எடுப்பது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தோளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் இவரது மகன்கள் சேட்டு,வயது 50, செந்தில்,வயது.44. இவர்கள் இருவருக்கும் விவசாய பொது கிணறு உள்ளது. இதில் இருவரும் விவசாயத்துக்கு தண்ணீர் இறைத்து வந்தனர். இந்த நிலையில் விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சேட்டு தனியாக மோட்டார் பொருத்தி தண்ணீர் இறைக்க முயற்சி செய்துள்ளார். இதனை தம்பி செந்தில் கேட்டதன் பேரில் இருவருக்கும் இடையே கடந்த 3ந்தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் காயம்பட்ட சேட்டு அவரின் மனைவி உஷாராணி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், வயது 44.யை ஏ.பள்ளிபட்டி போலீசார் கைது செய்தனர். இவரது மனைவி சீதா ,வயது. 35. மகன் சிபிராஜ், வயது.22. ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.