வேட்பு மனு தாக்கலின்றி வெறிச்சோடிய பொ.மல்லாபுரம் பேரூராட்சி

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கலின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.;

Update: 2022-02-02 08:45 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியில் உள்ள பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஆகிய, மூன்று டவுன் பஞ்சாயத்துகள் அமைந்துள்ளது.

இதில் கடந்த, 28 ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவதால், கடந்த, 28 ல் இருந்து மூன்று நாட்கள் ஒருவர் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.

நேற்று கடத்தூரில் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். பொ.மல்லாபுரம் டவுன் பஞ்சாயத்தில் ஒருவர் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News