கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்: நடவடிக்கைக்கு விவசாயிகள் வேண்டுகோள்

கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்கக்கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-09-19 04:15 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூரில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி ஊராட்சியில் மஞ்சவாடி,சின்னமஞ்சவாடி, லட்சுமாபுரம், கோம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இவர்களின் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின் பாதைகளில் மின் கம்பங்கள் நீண்ட தொலைவு இடைவெளி விட்டு விட்டுஅமைக்கபட்டுள்ளது.

இதனால் மின் பாதைகளில் மின் கம்பிகள் கைக்கு எட்டுமளவிற்கு தொங்கிச் செல்வதால் மழைகாலங்களில் ஷாக் அடிப்பதாகவும், விவசாய நிலங்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக சர்வே எண் 72,73,74 ஆகிய விவசாய நிலங்களில் வழியாக செல்லும் மின் கம்பிகளுக்கு புதிய மின் கம்பங்கள் அமைக்க படாததால் மரக்கொம்பு நட்டு மின் கம்பி தொங்காதாவாறு கட்டப்பட்டுள்ளது. ஆகவே இடைவெளி குறைத்து மின் கம்பங்கள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News