பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையின் சார்பில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மன்றத்தின் சார்பில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
இதில் மாணவர்களிடையே இயற்பியல் சார்ந்த அடிப்படை அளவீடும் கருவிகள் பயன்பாடுகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு விளக்கக்காட்சி பி.பி.டி., மூலம் தெளிவாக காண்பித்தது மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துறைத்தலைவர் சங்கீதா, உதவிப்பேராசிரியர் பிரியதர்ஷினி, தங்கராசு, சக்திவேல், ஜோதி, முனிராஜ் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.