கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு;

Update: 2021-06-24 14:45 GMT

கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட உட்பட்ட ஓபிளிநாய்க்கனஹள்ளி, மடதஹள்ளி,வெங்கடதாரஹள்ளி,தாளநத்தம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தார் சாலை அமைத்தல், ஏரி தூர்வாருதல்,சிறுபாசன ஏரி ஆழப்படுத்தும்பணி, குடிநீருக்காக கிணறு ஆழப்படுத்துதல், கழிவுநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இன்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். முன்னதாக யூனியனில் உள்ள 25 ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன், உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News