பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிடந்த நாட்டு துப்பாக்கி: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கல்லாத்துகாடு பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-11-10 07:30 GMT

கைப்பற்றப்பட்ட நாட்டுத்துப்பாக்கி.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ளது, கல்லாத்துகாடு பகுதி. இதையடுத்துள்ள ஏ. பள்ளிப்பட்டி பகுதியில் எஸ்.ஐ மனோகரன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் உள்ள புளி மரம் ஒன்றில், நாட்டுதுப்பாக்கி இருப்பதை கண்டனர்.

உடனடியாக அதை கைப்பற்றிய போலீசார், அது யாருடையது, எதற்கான அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News