விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் இறந்த தமாகா நிர்வாகி குடும்பத்திற்கு நிதிஉதவி;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் பாலு 60. தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் டி.அசோகன் , கட்சி சார்பில் இருபதாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் காமராஜ், நிர்வாகிகள் சுகர் சக்தி, குழந்தைவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.