பாப்பிரெட்டிப்பட்டி அருகே உழவர் தினவிழா: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அச்சம்பட்டி கிராமத்தில் உழவர் தின விழா நடைபெற்றது .

Update: 2021-11-26 16:15 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அச்சம்பட்டி கிராமத்தில் உழவர் தின விழா நடைபெற்றது .

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அச்சம்பட்டி கிராமத்தில் உழவர் தின விழா நடைபெற்றது .

இவ்விழாவினை பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர்  எஸ் மோகன்  துவக்கிவைத்து வட்டாரத்தில் விவசாயிகள் அனைவரும் சொட்டுநீர் பாசனம் பண்ணைக்குட்டைகள் அமைத்து பயன்பெற வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளின் மானியத் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் , மேலும் வேளாண்மை அலுவலர் செல்வம், விவசாயிகளை வரவேற்றுப் பேசினார் .

இவ்விழாவில் தோட்டக்கலை தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலை அலுவலர் வினோதினி கலந்துகொண்டு தக்காளி, கத்தரி, மிளகாய் , நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்படுவது குறித்து பேசினார் .

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் துறையின் உதவி செயற்பொறியாளர் சண்முகப்பிரியா, கால்நடை உதவி மருத்துவர் வாசவன் , வனவர் .சின்ராசு மற்றும் பாஸ்கர் , வேளாண்மை பொறியியல் துறையின் சார்பாக மகாலட்சுமி , மீன்வளத் துறையின் சார்பாக மேற்பார்வையாளர் சங்கர் , பட்டு வளர்ச்சித் துறையின் சார்பாக ஆய்வாளர் சங்கீதா , வேளாண்மை உதவி அலுவலர்கள் தண்டபாணி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து பேசினார்கள் .

இவ்விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அட்மா திட்ட தலைவர் சண்முகம், ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி , அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர் பொன் குமார், அரூர் சீனிவாசா அறக்கட்டளை கிராம மேம்பாட்டு அலுவலர் ரஹீம் முகமது, உழவர் நண்பர் ஈஸ்வரி, முன்னோடி விவசாயி ராஜாங்கம் , சொட்டுநீர் நிறுவன ஊழியர்கள் முரளிதரன், பிருந்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியின் முடிவில் களை எடுக்கும் இயந்திரம் கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது . நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் கா. சரவணன் அவர்கள் செய்திருந்தார்.

Tags:    

Similar News