தர்மபுரி அருகே இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை;

Update: 2021-12-14 05:15 GMT

தர்மபுரி அடுத்த சோளக் கொட்டாய் சேர்ந்தவர் வீரமணி வயது 42.சிவில் இன்ஜினியர். இவரது மனைவி தமிழ்மணி பாலக்கோட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் தர்மபுரி செந்தில் நகரில் வசித்து வந்தனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக விரக்தியிலிருந்த வீரமணி நேற்று தனது சொந்த ஊரான சோளக்கொட்டாய் கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News