பாப்பிரெட்டிப்பட்டி அருகே இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2021-12-04 16:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை பயணம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம், மருக்காலம்பட்டி, அம்மாபாளையம், கவுண்டம்பட்டி ஊராட்சி தோளனூர் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட கலைப்பயணம், விழிப்புணர்வு பிரச்சார கலை நிகழ்ச்சிகள் நேற்று வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், ஜான் பெலிக்ஸ் சேகர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்வது, அதனை கல்வித்துறை யை சேர்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர் எழிலரசி, பள்ளி தலைமையாசிரியர்கள் கலைச்செல்வி, பொன் மொழி, பழனியப்பன், ஆசிரியர் பயிற்றுநர் சுதா ஆகியோர் செய்தனர்.இதில் தன்னார்வலர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News