பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறு: விவசாயி கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர் நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கேசியராக அதே ஊரை சேர்ந்த மல்லேஸ்வரன், வயது 57 பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் அப் பகுதியை சேர்ந்த விவசாயி உமாசங்கர், வயது 54. என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு சென்று, தனது டெபாசிட் தொகையை கொடுக்கும்படி கோரியுள்ளார். கேஷியர் நீ, தெளிவாக இல்லை நாளை வா கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதனால் கோபமடைந்த உமாசங்கர், குடிபோதையில் கேஷியர் மல்லேஸ்வரனை அடித்துள்ளார். புகாரின் பேரில் உமாசங்கரை பொம்மிடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.