பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், மாணவர்களிடம் மதுப்பழக்கம் புகைப்பிடித்தல் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருள் பயன்படுத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் எஸ்.எஸ்.ஐ.சரவணன், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.