அதிமுக. ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை தாக்கிய திமுகவினர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சில்லாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திமுகவினரால் தாக்கப்பட்டார்.;

Update: 2021-12-23 03:45 GMT

திமுகவினரால் தாக்கப்பட்த சில்லாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவரின்  கணவர் அர்ஜுனன்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்தில் 25, ஊராட்சிகள் உள்ளது. இதில் சில்லாராஹள்ளி ஊராட்சியில் சில்லாரஹள்ளி, அம்பேத்கர் நகர், சில்லாரஹள்ளி, இந்திராநகர், பாரதி நகர் பூஞ்சோலை நகர் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் ஐந்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்

இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்க மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குனர்கள் 4 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் தி.மு.க.வை சேர்ந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குனர் சஞ்சீவன்,47. என்பவர் கடந்த 2012ல் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆனால் 2000 ல் இருந்து பணிபுரிந்து வருவதாக போர்ஜெரி செய்து ஊராட்சி மூலம் சம்பளம் பெற்று வந்ததாகவும், இதுமட்டுமல்லாமல் பொது மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்காமல் இருந்துள்ளார்.

இதுகுறித்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஊராட்சி தலைவர் ஹரியா பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பு கருதி மற்றொரு மேல்நிலை தொட்டி குடிநீர் இயக்குனரை வைத்து குடிநீர் வழங்கி வந்துள்ளார்.

இது குறித்த விசாரணைக்காக கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்ற சந்தீபன், நேற்று மாலை  ஊராட்சிக்கு வந்து தலைவர் ஹரியாவின் வீட்டு முன்பு தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து கேட்ட அவரது கணவன் அர்ஜுனனை , சந்தீப்பன் உள்ளிட்ட அவருடன் வந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளார்கள்.

இந்த தாக்குதலில் தி.மு.க.,வை சேர்ந்த மாரிமுத்து, அவரது மகன் ராமன், சக்தி, குரு கிருஷ்ணமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் தாக்கியதில் படுகாயம் அடைந்த, அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் ஹரியா, அவரது கணவர் அர்ஜுனன், கூட்டுறவு வங்கி தலைவர் சக்திவேல் படுகாயம் அடைந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News