தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-12-08 06:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டியில் சுகாதார மேம்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரிசங்கர் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிபகுதியிலும் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி தேவன், அமரவேல், ஓய்வு பெற்ற டாக்டர் பழனிச்சாமி, அனைத்து பஞ்.தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மூக்காரெட்டிப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது, அ.பள்ளிபட்டியில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் தொழுநோய் மருத்துவமனை இருந்த இடத்தை அவசரகால விபத்து மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டியும் நவீன உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க கேட்டு அரசுக்கு வேண்டுகோள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News