பொம்மிடி அருகே அனாதையாக கிடந்த நாட்டுத் துப்பாக்கி: போலீசார் பறிமுதல்
பொம்மிடி அருகே அனாதையாக கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா தலைமையிலான தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், அவர்களாகவே தானாக முன்வந்து கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட மாட்டாது. அதையும் மீறி போலீசார் நேரடியாக கைப்பற்றினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என தண்டோரா போட்டு நேற்று பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதிகளில் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீவிர ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கதிரிபுரம் கவர மலை காட்டு பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். புகாரின்படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.