பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளில், டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-10 00:00 GMT

கடத்தூரில் டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  எதிர்வரும் 14 ந்தேதி நடைபெறும் கொரோனோ தடுப்பூசி முகாமையொட்டியும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊராட்சி செயலர்களுக்கு ஆய்வு கூட்டம்,  ஒன்றிய ஆணையாளர் அருள்மொழி தேவன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாவதால், கிராமங்களில் டெங்கு பரவ வாய்ப்பு உள்ளது. ஆகவே அனைத்து கிராமங்களிலும் குடிநீர் தொட்டிகளையும்,  குளோரின் போட்டு சுத்தப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும். கிராமப்பகுதிகளில், குழிகள், மட்டை, பிளாஸ்டிக், டயர் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நாள்தோறும் தண்ணீர் விடும் போது குளோரின் போட்டுதான் விட வேண்டும். வரும் 14,ந்தேதி கொரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வைக்க வேண்டும். திட்டபணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 
ஆய்வு கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கெளரி சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர், பணி மேற்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல அலுவலர் முரளிகண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News