ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பேனர் வைப்பது குறித்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-09-06 16:45 GMT

ஏ பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய உதவி காவல் ஆய்வாளர் மனோகரன்.

தர்மபுரி மாவட்டம், அ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கோவில் தர்மகர்த்தா, வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோருடன் பிளக்ஸ் பேனர், விளம்பர பேனர்கள் வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய உதவி காவல் ஆய்வாளர் மனோகரன், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். இனி மாவட்ட கலெக்டர் அல்லது கோட்டாட்சியர் அனுமதி பெற்றுதான் பிளக்ஸ் பேனர் வைக்கப்படவேண்டும். மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News