பொம்மிடி அருகே டிராக்டர் கலப்பையில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு
பொம்மிடி அருகே டிராக்டர் கலப்பையில் சிக்கி கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.;
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பில் பருத்தியை சேர்ந்தவர் தென்னரசு மகன் பிரவீன்,17. இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை 5:00 மணி அளவில் அவருடைய நிலத்தில், டிராக்டர் மூலம் டிரைவர் ஆனந்தன் உழுது கொண்டிருந்தார். அப்போது டிராக்டரின் பின் கலப்பை மீது அமர்ந்து உழுது கொண்டிருந்த கலப்பையில் இருந்து வருகின்ற மரவள்ளிக்கிழங்கை பிரவீன் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கீழே குனிந்து எடுக்கும்போது தவறி விழுந்து கலப்பையில் தலை மாட்டி படுகாயம் அடைந்தார். டிராக்டரை நிறுத்தி பார்க்கும்போது, அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். புகாரின்பேரில் பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.