பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சார்லஸ் பாப்பேஜ் பிறந்தநாள் விழா

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சார்லஸ் பாப்பேஜ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-12-29 01:15 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில்,  கணினி அறிவியல் துறை சார்லஸ் பாப்பேஜ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில்,  கணினி அறிவியல் துறை சார்பில், சார்லஸ் பாப்பேஜ் பிறந்த நாள் விழா மற்றும் கணிணி  அறிவியல் மற்றும் இயற்பியல் துறை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கான முதலாமாண்டு வரவேற்பு விழா,  கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் துறை தலைவர் சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் செல்வம் கலந்து கொண்டு கணினியின் வரலாறு மற்றும் கணினி துறையில் கணிதம் மற்றும் இயற்பியல் பங்களிப்பு குறித்து பேசினார். இறுதியில் உதவி பேராசிரியர் அருண் நேரு நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் செந்தில்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News