பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட தினம் கொண்டாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து நாட்டு நலப்பணி திட்ட தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2021-09-24 17:15 GMT

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட தினம் கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இத்தினத்தையொட்டி கல்லூரி வளாகத்தில் மரகன்றுகள் நடப்பட்டு கூண்டு வலை அமைத்தனர். இதில் திட்ட அலுவலரும் தமிழ் துறை தலைவருமான செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News