வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகள்; தந்தை, மகன் கைது
வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் துர்கைசாமி தலைமையிலான போலீசார் வத்தல்மலையில் உள்ள பெரியூர்,சின்னாங்காடு ஆகிய பகுதிகளில் போதை பொருள் ஒழிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சின்னாங்காடு பகுதியில் உள்ள விவசாயி தங்கவேல் வயது 58., மற்றும் மகன் சிங்காரம் வயது 33., ஆகிய இருவரும் அவர்களின் விவசாய தோட்டத்தில் வெண்பூசணி பயிரிடப்பட்டதில் கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவரையும் பொம்மிடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.