தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-14 06:00 GMT

தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர், மணியம்பாடி, அஸ்திகிரியூர், நல்லகுட்லஹல்லி, கோம்பை , புட்டிரெட்டிபட்டி .அய்யம்பட்டி , ஆத்தூர், குருபரஅள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. தொடர் மழையால் செங்கற்களை காய வைக்க முடியாததால், செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செம்மண்ணை குழைத்து, அச்சுகளில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பச்சை செங்கற்களை வெயில் இல்லாததால் உலர வைக்க முடியவில்லை. சாதாரண நாட்களில் பச்சை செங்கற்கள் ஒரு வாரத்தில் காய்ந்து விடும். ஆனால் மழையால் காயவைக்க முடியவில்லை. ‌ இதனால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. தொடர் மழையால் செங்கல் உற்பத்தி குறையத் தொடங்கியதால் தேவை அதிகமாகி செங்கல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Tags:    

Similar News