கடத்தூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

கடத்தூரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-12 16:30 GMT

அன்பரசன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே குடியிருப்பவர் அன்பரசன். இவர் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று கடத்தூரில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்துபார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் அவரின் வீட்டு அருகில் குடியிருப்பவர் கோவிந்தன் இவர் கோயமுத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். அவரும் வீட்டை பூட்டி விட்டுவேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரின் வீட்டுக் கதவுகளும் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

இதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் கடத்தூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News