வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை;
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு இவரது சசிகலா வயது 65. இவருக்கு இரண்டு மகன்கள், இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றனர்.
சசிகலா மட்டும் தனியாக தோட்டத்தில் வசித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி சேலத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றவர், நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கு வந்தவர் பூட்டு தாழ்பாள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . வீட்டில் உள்ளே சென்று பார்க்கும் பொழுது வீட்டில் வைத்திருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் நான்கு அரை பவுன் மோதிரங்கள் என இரண்டு பவுன், கால் செயின் உள்ளிட்டவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்