வன்னியர்களை உதாசீனபடுத்தும் அன்புமணி: மாஜி பாமக நிர்வாகி குற்றச்சாட்டு

வன்னியர்களை அன்புமணி ராமதாஸ் உதாசீனபடுத்துகிறார் என தி.மு.க.வில் இணைந்த மாஜி பா.ம.க நிர்வாகி சத்தியமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-10-05 05:00 GMT

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்த முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகார பட்டியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் கடந்த 2016ல்  பா.ம.க. சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின் 2019.ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இவருக்கு பா.ம.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு அ.தி.மு.க., கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

தனது தனிப்பட்ட செல்வாக்கால் தமிழகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். தொடர்ந்து பா.ம.க.வில் இருந்து ஒதுங்கியிருந்தார். பா.ம.க., அறிவித்த எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில் தர்மபுரி தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.,வில் இணைவதாக வந்த தகவலையடுத்து, அவர் வகித்து வந்த தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த 23ந்தேதி  நீக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று மாலை சத்தியமூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் சென்னை சென்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக பா.ம.க. மேற்கு, கிழக்கு மாவட்டம் என உள்ளது. ஆனால், கட்சி ஆரம்பத்திலிருந்து இதுவரை மேற்கு மாவட்டமான தர்மபுரி, பென்னாகரம் தொகுதிக்கு மட்டும் வாய்ப்பு சட்ட மன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2016,ல் தமிழகத்தில்  அதிக வாக்கு  பா.ம.க., பெற்றது பாப்பிரெட்டிபட்டி  தொகுதி.

ஆனால், கிழக்கு மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சட்டமன்ற தொகுதிக்கு அங்கீகாரம் பா.ம.க.,வில் வழங்கப்படவில்லை . இந்த இரு தொகுதியிலுள்ள பா.ம.க., கட்சி காரர்கள், நிர்வாகிகளையும், வன்னியர்களையும், உதாசீனப் படுத்தினார்கள்.

எந்த ஒரு பா.ம.க .,வினரும், அன்புமணி ராமதாசை எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. தன்னைவிட முன்னே எவரும் செல்ல கூடாது., என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பா.ம.க., காரர்கள் எந்த ஒரு குறையையும் அவரிடம் சொல்ல முடியாத ஒரு சூழல் உள்ளது .அவ்வாறு சொன்னால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார். இதுநாள் வரை அரூர்., பாப்பிரெட்டிப்பட்டி யில் உள்ள பா.ம.க.வினரை கட்சி முன்னிலைப் படுத்தப் பட்டு வருகிறது.

ஆனால், அம்மக்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த எம்.பி.தேர்தலில் அரூர் தொகுதியில் சுமார் 40 ஆயிரம் வாக்கு குறைவாக அன்புமணி ராமதாஸ் பெற்றார். அதற்கு, காரணம் அவருடைய செயல்பாடுகளே ஆகும். கட்சி காரர்களிடம் குறைகளை கேட்ப தில்லை.

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புறக்கணிக்க பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும், பென்னாகரம், நல்லம்பள்ளி,என மேற்கு மாவட்டத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.கிழக்கு மாவட்டத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அரூர் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என கூறினார்.

Tags:    

Similar News